பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய 2 வாலிபர்கள் கைது
நாட்டறம்பள்ளி அருகே 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நாட்டறம்பள்ளி போலீசில் கொடுத்துள்ள புகாரில், புதுப்பேட்டை அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எனது பேத்தி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் 2 வாலிபர்கள் காதலிக்க வற்புறுத்துகின்றனர்.
மேலும் கேலி செய்து, ஆபாசமாக பேசுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுப்பேட்டை போயர் வட்டம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சின்னராசு (வயது 22), ராஜேந்திரன் மகன் கந்தவேல் (19) ஆகிய 2 பேரை கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.