முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அறந்தாங்கி அருகே அழியாநிலையை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 60). இவர், ஆவணத்தாங்கோட்டை குருந்திரகோட்டை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மணிவிளான் பகுதியை சேர்ந்த அன்வர் பாட்ஷா (22), எல்.என்.புரத்தை சேர்ந்த ராஜேஷ் (30) ஆகிய இருவரும் மோகன்தாசை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து பணம் தருமாறு மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.550-ஐ பறித்துகொண்டு சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வர் பாட்ஷா, ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.