வீடுபுகுந்து திருடிய 2 வாலிபா்கள் கைது

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியில் வீடுபுகுந்து திருடிய 2 வாலிபா்கள் கைது 30 பவுன் நகைள் பறிமுதல்

Update: 2023-01-18 18:30 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை இந்திரா நகரில் வசிக்கும் கலியன் மகன் வெள்ளிப்பிள்ளை(வயது 41). ஆட்டோ டிரைவரான இவர் சம்வத்தன்று ஆட்டோவில் கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டார். அப்போது அவரது வீட்டுக்குவந்த 2 மர்ம நபர்கள் வெள்ளிப்பிள்ளையின் தாய் அஞ்சலையிடம் உன் மகனை தேடி வந்ததாகவும், கடைக்கு சென்று சோடா வாங்கி வருமாறு கூறினார்கள். இதை உண்மை என்று நம்பி அவர் கடைக்கு சென்றதும் அந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 1½ பவுன் சங்கிலியை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீடு புகுந்து நகையை திருடியவர்கள் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் ராஜா என்கிற ராக்கெட் ராஜா(25), சக்கரை மகன் ராம்குமார்(30) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து தண்டலை மற்றும் சின்னசேலம், கீழ்க்குப்பம், வரஞ்சரம், தியாகதுருகம் ஆகிய பகுதியில் பல்வேறு இடங்களில் நகைகள் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து ராஜா, ராம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்