டாக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-16 18:02 GMT

ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் சிவக்குமார் (வயது 27) மற்றும் ஜெயசீலன் (25). இருவரும் உடல்நிலை குறைவால் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது டாக்டர் கார்த்திகேயனை பார்க்க வரிசையில் நிற்காமல் நேரடியாக டாக்டர் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இருவரையும் வரிசையில் வரும்படி டாக்டர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் டாக்டரை தாக்கியதாக தெரிகிறது.

இச்சம்பவத்தால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் திருப்பத்தூர் இணை இயக்குனர் மாரியப்பன் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து டாக்டர் கார்த்திகேயன் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார், ஜெயசீலன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்