செல்போன் -பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
செல்போன் -பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்்டனர்.
பாளையங்கோட்டையை சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் (வயது 44) என்பவர் செல்போனில் அவரது நண்பர்களுடன் பேசி உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வி.எம்.சத்திரம் அருகே வருமாறு செல்போனில் தகவல் வந்ததும் அங்கு சென்ற செந்தாமரைகண்ணனிடம் இருந்து ரூ.400 மற்றும் 2 செல்போன்கள், ஒரு கைக்கடிகாரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சிலர் பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து செந்தாமரைகண்ணன் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செய்துங்கநல்லூரை சேர்ந்த அருணாச்சலம் (33), குணசேகரன் (21) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.