2 வாலிபர்கள் வழிப்பறி வழக்கிலும் கைது

2 வாலிபர்கள் வழிப்பறி வழக்கிலும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-27 20:37 GMT

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பகுதியை சேர்ந்த மதன் மகன் மகேந்திரன் (வயது 24). இவர் காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், பழைய குட்செட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரை அரிவாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து மகேந்திரன் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மகேந்திரனிடம் அரிவாளை காட்டி பணத்தைப் பறித்து சென்றது திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்த பரணிகுமார் (22), பாலக்கரையை சேர்ந்த சரவணன் (22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். மேலும் இவர்கள் தான் திருச்சி பெரியகடை வீதியில் நகைப்பட்டறையில் 1 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்