வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-08-24 20:47 GMT

நாகர்கோவில்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 77). இவர் கடந்த 2005-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு சேமிப்பு கிட்டங்கி மேலாளராக பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தார். மேலும் ஆரல்வாய்மொழியில் ஒரு புதிய வீடு கட்டி வாடகைக்கு விட்டார். இதுதொடர்பாக கடந்த 18-9-2005 அன்று குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணையை நீதிபதி மாயகிருஷ்ணன் நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

2 ஆண்டு ஜெயில்

அப்போது குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் அவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாயகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். மேலும் 5 ஆயிரத்தை கட்ட தவறினால் கூடுதலாக 2 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

முருகானந்தம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து கட்டிய புது வீட்டை பொதுவுடைமையாக்கி ஏலம் விட்டு அரசுடைமை ஆக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்