பட்டாசு ஆலையில் திருடிய 2 தொழிலாளர்கள் சிக்கினர்
பட்டாசு ஆலையில் திருடிய 2 தொழிலாளர்களை கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் அருகே உள்ள வெள்ளையாபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்த முருகன் மனைவி முனியம்மாள் அறை பிடித்து பட்டாசு தயாரித்து வந்தார். இந்தநிலையில் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் மாயமானது. இதுகுறித்து முனியம்மாள் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த தொழிலாளிகளான மாரீஸ்வரன் மகன் வைரமுத்து (வயது 23), வேல்சாமி மகன் சுப்புராஜ் (44) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது ெசய்தனர்.