போலீஸ் ஏட்டுவை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பெண்கள் கைது
போலீஸ் ஏட்டுவை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
வாங்கல் அருகே உள்ள திருமக்கூடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் செண்பகவல்லி (வயது 25), மலர்க்கொடி (45). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள இடங்களை அளப்பது சம்பந்தமாக போலீஸ் பாதுகாப்பு கேட்டு வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றுள்ளதாகவும், வந்தவுடன் உங்கள் கோரிக்கை குறித்து முறையாக எழுதி கொடுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் ஏட்டு ஜோதி அவர்களிடம் சென்று சாலையில் அமர்ந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் எனக்கூறி உள்ளார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு ஜோதியை தகாத வார்த்தையால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் ஏட்டு ஜோதி கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து, செண்பகவள்ளி, மலர்க்கொடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.