ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது

ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-31 20:21 GMT

திருச்சி பிச்சாண்டார்கோவில் சொக்கலிங்கம்பிள்ளை சாலையை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது 65). இவர் நேற்று மதியம் பிச்சாண்டார்கோவிலில் இருந்து ஒரு டவுன் பஸ்சில் சத்திரம் பஸ் நிலையம் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சில் அவருக்கு அருகில் இருந்த 2 பெண்கள் விஜயலட்சுமியிடம் பேச்சு கொடுத்தவாறு அவரது கைப்பையில் வைத்திருந்த மணி பர்சை திருடியுள்ளனர். இதை கவனித்த விஜயலட்சுமி பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் உதவியுடன் 2 பெண்களையும் பிடித்து, சத்திரம் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மேலும் இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர்கள், தூத்துக்குடி அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தின் மனைவி பவானி(40), பாண்டி மாணிக்கம் மனைவி அபிராமி(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 ேபரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து விஜயலட்சுமியின் மணிபர்ஸ், அதில் இருந்து பணம் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்