ஒரே பதிவு எண் கொண்ட 2 லாரிகள் சிக்கியது
கடையத்தில் ஒரே பதிவு எண் கொண்ட 2 லாரிகள் சிக்கியது
கடையம்:
கடையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரே பதிவு எண் கொண்ட 2 லாரிகள் செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையம் மாதாபுரம் பகுதியில் ஒரே பதிவு எண் கொண்ட 2 லாரிகள் சரக்குகள் ஏற்றி வந்து தெரியவந்தது.
இதையடுத்து 2 லாரிகளையும் போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், 2 லாரிகளும் சிவகாசியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், சாலை வரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றிற்காக ஒரே பதிவு எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது. தொடா்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.