மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நல்லம்பள்ளி:-
புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல பறக்கும்படை அதிகாரிகள், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மண் ஏற்றி வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். லாரியை நிறுத்திய 2 டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 2 லாரிகளையும் அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மண்டல உதவி புவியியலாளர் அருள்முருகன் கொடுத்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.