கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

விழுப்புரம் அருகே கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

Update: 2023-04-21 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் குமரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிடாகம் மேம்பாலம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த 2 லாரிகளை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். அதிகாரிகளை பார்த்ததும், லாரிகளை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் கூழாங்கற்கள் இருந்ததும், இதனை கடத்திக்கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கூழாங்கற்களுடன் இருந்த அந்த 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து தனி வருவாய் ஆய்வாளர் குமரன், விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்