மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

Update: 2023-01-11 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 லாரிகள் வந்தன. அந்த லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்த கொண்டு செல்வதாக டிரைவர்கள் தெரிவித்தனர். மேலும் அது தொடர்பான ஒப்பந்தம் உள்ளதாகவும் காண்பித்தனர். ஆனால் அவர்களிடம், தமிழக அரசு அனுமதி வழங்கியது தொடர்பான ரசீது எதுவும் இல்லை. இதனால் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர்களான கேரளாவை சேர்ந்த சந்தீப்(வயது 36), சுரேஷ்(32), ரினீஸ்(42) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்