சீவூர் ஊராட்சி தூய்மை பணிக்கு 2 டிராக்டர்கள்
சீவூர் ஊராட்சி தூய்மை பணிக்கு 2 டிராக்டர்களை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக அரசு சார்பில் ஊராட்சிகளில் தூய்மை பணிக்கு டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. சீவூர் ஊராட்சிக்கு ரூ.16 லட்சத்தில் இரண்டு டிராக்டர்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டர்கள் தூய்மை பணிக்காக தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகாபரத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பற்குணன், ஜான்சிராணி, லட்சுமி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஜீஸ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தூய்மை பணிக்காக இரண்டு டிராக்டர்களை தொடங்கி வைத்தார். இதில் தூய்மை பணியாளர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் செழியன் நன்றி கூறினார்.