ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

குடியாத்தம் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-02 14:52 GMT

குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை ஏரிக்கரை பகுதியில் ரேஷன் அரிசியுடன் மினி லாரி ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தட்டாங்குட்டை ஏரி பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஏரிக்கரை பகுதியில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

போலீசார் அந்த லாரியை சோதனை செய்தபோது லாரியில் 40-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் பிடிபட்ட ரேஷன் அரிசி மற்றும் லாரியை மேல் நடவடிக்கையாக வேலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்