அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து சிவகங்கைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் இருந்து சிவகங்கைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.