போதை ஊசி, மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது

கரூரில் போதை ஊசி, மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-10 18:15 GMT

தீவிர சோதனை

கரூர் அமராவதி ஆற்றங்கரை பகுதிகளில் போதை ஏற்படுத்தும் (நாற்கோட்டிக் ட்ரக்ஸ்) ஊசி மருந்து மற்றும் மாத்திரைகள் விற்கப்படுகிறது. அதனை வாலிபர்கள் பலர் வாங்கி செலுத்தி கொள்கின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தனர்.அதன்பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் மாறுவேடத்தில் சென்று அங்கு தீவிர சோதனை ஈடுபட்டனர்.

2 பேர் கைது

அப்போது அங்கு போதையை ஏற்படுத்தும் ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த 2 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார் (வயது 30), கண்ணார சந்துவை சேர்ந்த அன்பு என்கிற முகமது அபு (23) என்பது தெரியவந்தது.இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏராளமான ஊசி மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்