செல்போன்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது

Update: 2023-08-13 19:30 GMT

ஆத்தூர்:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்தொரசலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் ஆத்தூர் அருகே காந்திபுரத்தில் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது லாரியில் இருந்த செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதேபோல் நேற்று காலை நடைப்பயிற்சி சென்ற தலைவாசல் அருகே சம்பேரி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவருடைய செல்போன், ஆத்தூர் அருகே வடசென்னிமலை காமராஜ் நகரை சேர்ந்த சம்சுதீன் என்பவருடைய செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பறித்து தப்பி செல்ல முயன்றனர். அப்போது அக்கம் பக்கத்தினர் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து ஆத்தூர் ரூரல் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் ஆத்தூர் மந்தவெளியை சேர்ந்த செல்வராஜ் மகன் சந்துரு (வயது 21), புதுப்பேட்டை காதர் பேட்டையை சேர்ந்த ஷாஜகான் மகன் ரியாஸ் (21) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்