புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல் 2 வாலிபர்கள் கைது

அரகண்டநல்லூர் அருகே புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல் 2 வாலிபர்கள் கைது

Update: 2022-12-03 18:45 GMT

அரகண்டநல்லூர்

அரகண்டநல்லூர் அருகே முகையூர் ரெயில் நிலைய பகுதியில் அரகண்டநல்லூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 305 புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் கருணாகரன் (வயது 20), ராஜேந்திரன் மகன் பார்த்திபன்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 305 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்