சாராயம் கடத்தல் 2 வாலிபர்கள் கைது

பகண்டை கூட்டுரோடு அருகே சாராயம் கடத்தல்; 2 வாலிபர்கள் கைது

Update: 2022-11-19 18:45 GMT

ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள மையனூர் கிராமவனப்பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக பகண்டை கூட்டுரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை குறிப்பிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்தபோது லாரி டியூப் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சாராயம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் மையனூரை சேர்ந்த அங்கமுத்து மகன் சுரேஷ்(வயது 26), அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் வேல்முருகன்(25) என்பதும், இவர்கள் இருவரும் லாரி டியூப்பில் 60 லிட்டர், பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் என மொத்தம் 70 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக கடத்தி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ், வேல்முருகன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களுடன் 70 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்