திருவாரூர் அருகே அரசு பஸ் படிக்கட்டு உடைந்த விவகாரம்: போக்குவரத்துக்கழக என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்காலிக பணி நீக்கம்

திருவாரூர் அருகே அரசு பஸ் படிக்கட்டு உடைந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்துக்கழக என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-07-09 18:11 GMT

திருவாரூர் அருகே அரசு பஸ் படிக்கட்டு உடைந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்துக்கழக என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

படிக்கட்டு உடைந்தது

திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி, வைப்பூர், சோழங்கநல்லூர், நரிமணம் வழியாக நாகூர் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் அதிகமான மாணவ- மாணவிகள் படிக்கட்டுகளில் பயணித்தபடி செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பஸ் நாகூரில் இருந்து திருவாரூர் வந்து கொண்டிருந்தபோது கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியது.

தற்காலிக பணி நீக்கம்

அப்போது வேகத்தடையில் உரசியதில் பஸ்சின் படிக்கட்டு முழுவதுமாக உடைந்து விழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக திருவாரூர் அரசு போக்குவரத்துக்கழக என்ஜினீயர் அசோகன், தொழில்நுட்ப பணியாளர் வீரபாண்டியன் ஆகிய 2 பேரை நாகை மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மகேந்திரகுமார் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்