2 பேர் கோர்ட்டில் சரண்

பட்டிவீரன்பட்டி அருகே தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி ரத்தினகுமார். கடந்த 8-ந்தேதி இவர் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல், பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வீசப்பட்டது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், மைதிலிநாதன், அபிக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.


இந்தநிலையில் ரத்தினகுமார் கொலை வழக்கு தொடர்பாக அய்யங்கோட்டையை சேர்ந்த பிரேம்குமார் (24) மதுரை கோர்ட்டிலும், சித்தையன் கோட்டையை சேர்ந்த இளங்கோவன் (28) ஆத்தூர் கோர்ட்டிலும் நேற்று முன்தினம் சரணடைந்தனர். மேலும் தேடப்பட்டு வந்த அய்யங்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அய்யங்கோட்டையில் உள்ள விக்னேஷ் வீட்டை சேதப்படுத்தியது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், சடையாண்டி, முனீஸ், சதீஷ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்