கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு..!

தேர்வு விடுமுறை நாட்களை ஒட்டி அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Update: 2023-04-29 10:03 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மிதவைக்குளம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த இரு மாணவர்கள் தேர்வு விடுமுறை நாட்களை ஒட்டி அரசு கலைக்கல்லூரில் செண்ட்ரிங் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாரதவிதமாக வெல்டிங் வயரை மிதித்ததால், ஹரிஷ்குமார்(15), ரவிச்செல்வம்(17) ஆகிய 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாணவர்கள் உயிரிழந்தது குறித்து தொழிலாளர் நலத்துறை விசாரணைக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர் துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

குடும்ப சூழல் காரணமாக பள்ளி மாணவர்கள் விடுமுறையில் கட்டுமானப்பணியின் போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.  

 

Tags:    

மேலும் செய்திகள்