அரசு கல்லூரி கட்டிட பணிக்கு ெசன்ற பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேர் பலி
திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டிட பணிக்கு ெசன்ற பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டிட பணிக்கு ெசன்ற பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
2 மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஹரிஷ் குமார் (வயது 15). விருதுநகரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருைடய மகன் ரவிசெல்வம் (17). இவர் நரிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.
அரசு கல்லூரி கட்டுமான பணி
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஹரீஷ்குமாரும், ரவி செல்வமும், திருச்சுழி மேலேந்தல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டுமான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
அங்கு சென்டிரிங் பணி நடந்து கொண்டிருந்தது. இருவரும் அது தொடர்பான வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
எதிர்பாராதவிதமாக மாணவர்கள் ஹரிஷ் குமார், ரவிசெல்வம் ஆகியோர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையறிந்து அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நரிக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பலியான 2 மாணவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இருவரது உடல்களையும் பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
காண்டிராக்டர் மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறைக்கு வேலைக்கு சென்ற 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களை கட்டுமான பணிக்கு அமர்த்தியது தொடர்பாக அந்த பணியை மேற்கொண்டு வரும் காண்டிராக்டர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ெதாடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.