2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

வண்டுவாஞ்சேரியில் 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம் ஏற்பட்டது.

Update: 2023-05-19 20:10 GMT

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி மேல தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது40). இவரது கூரை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சமையல் அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை தொடர்ந்து வீடு முழுவதும் தீப்பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது தீப்பொறி அருகில் உள்ள கலியமூர்த்தி என்பவர் கூரை வீட்டில் விழுந்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் 2 வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்