2 கோவிலில் நகை, பணம் கொள்ளை
ஆரல்வாய்மொழி அருகே 2 கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்ைத கொள்ளையடித்து சென்றனர். மேலும், ஒரு கோவிலில் ெகாள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே 2 கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்ைத கொள்ளையடித்து சென்றனர். மேலும், ஒரு கோவிலில் ெகாள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்மன் கோவில்
ஆரல்வாய்மொழி அருேக குமாரபுரத்தில் உச்சினிமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் கோவில் கொடை விழா நடைபெற்றது. நேற்று 8-ம் கொடை விழா நடந்தது. இதற்கான ஏற்பாட்டை செய்வதற்காக கோவில் பூசாரி சுதன் மதியம் கோவிலை திறக்க சென்றார்.
அப்போது கோவிலில் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அப்போது கருவறையில் வைத்திருந்த குடத்திலான 4 உண்டியல்கள் மாயமாகி இருந்தன. மேலும் அம்மன் சிலைகளில் இருந்த 8 கிராம் தாலி கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.
இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது 4 உண்டியல்களும் கோவில் வளாகத்தில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தன. அவற்றில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஊர் தலைவர் பாலசுந்தரம் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் 2 கோவில்களில் கைவரிசை
இதேபோல் குமாரபுரத்தின் அருகே நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் சுடலைமாடன் சாமி கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து உள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கோவிலுக்குள் செல்ல முடியாததால் எதுவும் கொள்ளை போகவில்லை. அங்கு பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராவில் ஒரு ெகாள்ளையனின் உருவம் பதிவாகியுள்ளது.
குமாரபுரத்தில் கொள்ளையடித்தவர்களும், கிருஷ்ணாபுரத்தில் கைவரிசை காட்டியவர்களும் ஒரே நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.