பாலத்தில் கார் மோதி 2 போலீசார் படுகாயம்

பாலத்தில் கார் மோதி 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-09-05 19:33 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பாதுகாப்பு பணி முடித்துவிட்டு காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ரமேஷ் (வயது 43) மற்றும் போலீஸ்காரர் மணிகண்டன் (39) ஆகிய 2 பேர் காரில் போலீஸ் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ஏட்டு ரமேஷ் ஓட்டினார். தனியார் கல்லூரி அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோர பாலத்தின் மீது மோதியது. இதில் ரமேஷ், மணிகண்டன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்