2-ம்போக நெல் நடவு பணி தொடக்கம்

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் 2-ம்போக நெல் நடவு பணி தொடங்கியது.

Update: 2022-12-19 19:00 GMT

குச்சனூர் அருகே உள்ள கூழையனூரில் இருந்து வீரபாண்டி மற்றும் பழனி செட்டிப்பட்டி வரை கம்பம் பள்ளத்தாக்கின் கடை மடை பகுதியாக அமைந்துள்ளது.

இந்த பகுதிகளில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து கம்பம்பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியான வீரபாண்டி பகுதியில் 2-ம்போக நெல் நடவு பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதேபோல் உப்புக்கோட்டை, சடையால்பட்டி, போடேந்திபுரம் ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 2-ம்போக நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். முல்லைப்பெரியாறு தண்ணீர் இன்னும் 2 மாதத்திற்கு இருந்தால் 2-ம் போகத்தை நல்ல முறையில் அறுவடை செய்துவிடுவோம். இதற்கு வருணபகவான் கருணை காட்ட வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்