நீடாமங்கலம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் பக்கிரிசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது60). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது மகன் வீட்டில் மருமகள் பேரக்குழந்தையுடன் தங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 1½ பவுன் செயின், ½ பவுன் தாலி குண்டு, சைக்கிள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதேபோல் அருகில் உள்ள மைக் செட் கடையில் வயர் ரோல், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. திருவாரூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை மற்றும் வீட்டில் நகை,பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
நேற்று இதில் தொடர்புடைய திருவாரூர் கங்களாஞ்சேரி புத்தூர் தோப்புத்தெருவைச்சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது26), திருவாரூர் காலனித்தெருவைச் சேர்ந்த வீரையன் (20) ஆகிய இருவரையும் நீடாமங்கலம் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.