மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புன்னம்சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக கரூர்-ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஈரோடு மாவட்டம், வெங்கமேட்டூர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (29) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து, மாரிமுத்து மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில், மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாரிமுத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், ேவலாயுதம்பாளையம் போலீசார் ஜீவானந்தம் மீது வழக்குப்பதிந்து, அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.