உணவு பாதுகாப்பு அலுவலர் உள்பட 2 பேர் வீடுகளில் சோதனை
உணவு பாதுகாப்பு அலுவலர் உள்பட 2 பேர் வீடுகளில் சோதனை
கோவை
கோவை வடவள்ளி அருகே நவாவூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 78). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவருடைய கடையின் உரிமத்தை புதுபிக்க லாலிரோடு உணவு பாதுகாப்பு துறை அலுவலத்தில் அலுவலராக பணியாற்றிய வெங்கடேஷ் என்பவர் கடந்த 25-ந் தேதி ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவருக்கு உதவியாக பிரதாப் என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வெங்கடேஷ் வீட்டில் எதுவும் சிக்கவில்லை. பிரதாப் வீட்டில் ரூ.1 லட்சம் சிக்கியது. இந்த நிலையில் மாநில உணவு பாதுகாப்பு ஆணையாளர் லால் வெனா, லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.