மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது தொடர்பாக 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த மாதவன்(வயது 26), ஆகாஷ்(24) என்பது தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் 2 பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகாஷ் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் மாதவனை மணப்பாறை போலீசார் கைது செய்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதற்கு துணையாக இருந்த குளித்தலையை சேர்ந்த வினோத்தையும்(29) போலீசார் கைது செய்தனர்.