மேலூரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 2 பேர் கைது
ேமலூரில் பெட்ரோல் ெவடிகுண்டு வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருப்பத்தூரை சேர்ந்தவரை கொல்ல திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மேலூர்,
ேமலூரில் பெட்ரோல் ெவடிகுண்டு வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருப்பத்தூரை சேர்ந்தவரை கொல்ல திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
பெட்ரோல் குண்டு வீச்சு
மேலூரில் உள்ள சிவகங்கை ரோட்டில் நான்கு வழி சாலையில் உயர்மட்ட பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த பாலத்தின் கீழே ரோட்டில் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அதில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த அருண்குமார்(22), சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆன்லைன் டெலிவரி வேலை செய்பவர் விக்கி. இவரை தாக்கி கொலை செய்யும் நோக்கத்தில் இருவரும் நான்கு வழி சாலையில் வந்ததாகவும் அவர்கள் திருப்பத்தூர் செல்ல அந்த பாலத்தின் கீழே இறங்கி செல்வதற்கு பதிலாக தவறுதலாக சிவகங்கை ரோட்டில் உள்ள பாலத்தில் கீழே இறங்கி விட்டதாகவும்.
அப்போது கையில் தயாராக வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டுகள் எதிர்பாராத விதமாக தீ பற்றியதால் அவற்றை ரோட்டில் வீசி விட்டு தப்பி சென்றதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலூர் போலீசார் இந்த இருவரையும் கைது செய்ததால் விக்கி என்பவரை தாக்கும் சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.