ஆண்டிப்பட்டி அருகே உடை கற்கள் வெட்டி எடுத்த 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி அருகே உடை கற்கள் வெட்டி எடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-27 21:00 GMT

ஆண்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாஷா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் புள்ளிமான்கோம்பை-தெப்பத்துப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள தனியார் குவாரி அருகில் சட்டவிரோதமாக சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் உடைகற்களை வெட்டி எடுத்து, லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். உடனே போலீசார் அங்கு சென்று, லாரி டிரைவரான மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த முத்துராஜ் (வயது 33) மற்றும் பொக்லைன் எந்திர ஆபரேட்டரான திண்டுக்கல் மாவட்டம் விராலிபட்டியை சேர்ந்த சரவணன் (27) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துராஜ் மற்றும் சரவணனை கைது செய்தனர். அதேபோல் உடை கற்கள் ஏற்றிய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரை கண்டதும் தப்பிஓடிய குவாரி உரிமையாளர் அழகர்சாமி, மேலாளர் மகேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்