இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது
இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ரெட்டிக்குடிகாட்டை சேர்ந்த மோகனின் இருசக்கர வாகனம் திருட்டு போனது. இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனின் இருசக்கர வாகனத்தை திருடிய கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா மணல்மேட்டை சேர்ந்த சங்கரின் மகன் சக்தி, கூத்தப்பன் குடிகாடு பெரிய வாய்க்கால் தெருவை சேர்ந்த முத்துவின் மகன் நித்திஷ் என்ற நித்திஷ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.