மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-07 19:23 GMT

தா.பழூர்:

சாராயம் கடத்தல்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பெபின்செல்வபிரிட்டோ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், நிக்கோலஸ் ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் கோடாலிகருப்பூர் இடங்கண்ணி ஆகிய கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இடங்கண்ணி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். இதில் அவர்கள், தா.பழூர் அருகில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(வயது 41), ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கீழத்தெருவை சேர்ந்த செல்வராசுவின் மகன் வீரமணி(25) என்பது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் 20 லிட்டர் தண்ணீர் கேனில் 15 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

இதையடுத்து சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்