1 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

1 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-14 18:30 GMT

குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையினர் வெங்கமேடு போலீசாருடன் இணைந்து நெரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக கரூரை சேர்ந்த தினேஷ், மாதவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன், வேனும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்