பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேர் போக்சோவில் கைது

மணப்பாறை அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-23 18:51 GMT

மணப்பாறை அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பிளஸ்-2 மாணவிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற இரு மாணவிகளும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் 2 மாணவிகளும் நேற்று முன்தினம் மணப்பாறையில் இருப்பதாக அவரது பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பெற்றோர்கள் மாணவிகளை மீட்டு விசாரித்த போது மணப்பாறைபட்டியை சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 24), செந்தில் குமார் (23) ஆகியோர் பள்ளிக்கு சென்ற மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனராம். பின்னர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளனர்.

போக்சோ சட்டத்தில் கைது

இது குறித்த புகாரின் பேரில் வாலிபர்கள் இருவரையும் மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவிகளை ஏமாற்றி சென்று அத்துமீறலில் ஈடுபடு்ம் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்