தகராறு செய்த 2 பேர் கைது

குடிபோதையில் தகராறு செய்த 2 பேர் கைது

Update: 2022-06-08 22:06 GMT

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 6-ந் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாரிதுரை, மணிகண்டன், விக்கி என்ற விக்னேஷ், பிரபாகரன் ஆகிய 4 பேரும் பாலகிருஷ்ணனிடம் குடிபோதையில் தகராறு செய்தனர். தகராறு முற்றவே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரம் கழித்து 4 பேரும் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கினர். இதில் காயமடைந்த பாலகிருஷ்ணன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிதுரை, விக்கி என்ற விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்