போலி ஆவணம் கொடுத்து வாங்கியசிம் கார்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது

போலி ஆவணம் கொடுத்து வாங்கிய சிம் கார்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-05-08 18:45 GMT


விழுப்புரம் அருகே உள்ள டி.தேவனூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 23). இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு சிம்கார்டை பெற்று சிறிது காலம் பயன்படுத்தி வந்து பிறகு அதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலையை சேர்ந்த பத்மநாபன் (51), திருவண்ணாமலை அண்ணா நகரை சேர்ந்த காலித்கான் (25) ஆகியோர், சந்தோஷ்குமாரின் ஆதார் கார்டை பயன்படுத்தி அதிலிருந்த அவரது புகைப்படத்தை வைத்து மாற்றம் செய்து போலியான ஆவணம் தயாரித்து 3 செல்போன் சிம்கார்டுகளை பெற்று விற்றுள்ளனர்.

இதுகுறித்து சந்தோஷ்குமார், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபன், காலித்கான் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்