ஓசூர், சூளகிரியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

ஓசூர், சூளகிரியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-13 18:45 GMT

சூளகிரி:

சூளகிரி போலீசார் உலகம் கிராமம் மதுக்கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சோதனை செய்த போது அவர் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த அப்பையா (வயது 50) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சோதனை செய்தனர். இதில் அந்த நபர் 80 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர், ஓசூர் சீதாராம் நகரை சேர்ந்த ஆசீப்கான் (20) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்