தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் தூளிப்பட்டி அருகே உள்ள தில்லைநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 42). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (24), பிரகாஷ் (28), பாலாஜி, கவின் ஆகியோர் மது போதையில், விஸ்வநாதனை தகாத வார்த்தையால் திட்டி மரக்கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த விஸ்வநாதன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சந்தோஷ், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய பாலாஜி, கவின் ஆகிேயாரை தேடி வருகின்றனர்.