தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

நெய்வேலி அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-28 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலி அடுத்த அமேரி ஊராட்சிக்குட்பட்ட மந்தாரக்குப்பம்-நெய்வேலி சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று மதியம் ஆதண்டார்கொல்லை கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பார்த்தசாரதி (வயது 29), தவமணி மகன் தனவேல் (40) ஆகியோர் மதுபாட்டில் வாங்க சென்றனர். அப்போது இவர்களுக்கும், வடக்குவெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த அருணாச்சலம் மகன் தொழிலாளியான வீரசிங்கன் (40) என்பவருக்கும் மதுபாட்டில்கள் வாங்குவது தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, தவமணி ஆகியோர் வீரசிங்கனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதி, தவமணி ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்