வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
அவினாசி
அவினாசி பகுதியை சேர்ந்தவர் சிராஜ்(வயது 39). காய்கறி வியாபாரி. இவர் நேற்று காலை அவினாசி கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள மளிகை கடை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது 2 ஆசாமிகள் திடீரென்று அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் இல்லை என கூறிவிட்டு ஏ.டி.எம். மில் எடுத்து வருவதாக அவர்கள் இருவரையும் ஏ.டி.எம். மையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் இருவரையும் ஏ.டி.எம். மையத்திற்குள் தள்ளிவிட்டு திருடன் என கூச்சல் போட்டார்.
உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்களை பிடித்து அவினாசி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரனையில் அவர்கள் ராமநாதபுரம் சேர்வானி பகுதியை சேர்ந்த முனீஸ்குமார் (வயது 21) மற்றும் மாரீஸ்வரன் என்பது தெரியவந்தது.
இதில் மாரீஸ்வரன் என்பவர் கடந்த 5-ந் தேதி தனது நண்பர்களுடன் காரில் கருவலூர் வந்தே போது அங்கு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (29) என்பவரை காரில் அவினாசி கடத்தி வந்து கத்தி முனையில் அவருடைய ஏ.டி.எம். கார்டை பறித்து பணம் பறித்தவர் என தெரியவந்தது. இதையடுத்து மாரீஸ்வரன் மற்றும் முனீஸ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.