ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-04-12 20:39 GMT


மதுரை தெப்பக்குளம் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சின்னகண்மாய் பகுதியில் 2 பேர் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டனர். உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் புதுராம்நாடு ரோட்டை சேர்ந்த ரமேஷ் (வயது 36), ஐராவதநல்லூர் அந்தோணிகோவில் தெருவை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (22) என்பதும், அவர்கள் ஆயுதங்களுடன் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் குற்றசம்பவங்களில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் மறைந்திருந்ததாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்