லாட்டரி விற்ற 2 பேர் கைது
தொண்டாமுத்தூர் அருகே லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை விநாயகர் கோவில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 51), நாகராஜ் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், ரூ.1,600 பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.