லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்

திருவெண்ணெய்நல்லூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-08 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் கடை வீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் மேற்படி பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்துகொண்டிருந்த கொரட்டூர் குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் மகன் முத்துக்குமரன்(வயது 42), காந்திகுப்பம் வள்ளுவர் தெருவை சேர்ந்த அமாவாசை மகன் வையாபுரி(65) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 300 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்