லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் சிக்கினர்

குமுளியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-03 18:45 GMT

தமிழக எல்லையான குமுளி பஸ் நிறுத்தம் பகுதியில் லோயர்கேம்ப் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்ற 2 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 60), கோட்டூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ஐவண்ணன் (55) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,740 மதிப்புள்ள 105 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்