லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் சிக்கினர்
வடமதுரை அருகே, லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்.
வடமதுரை அருகே உள்ள அய்யலூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து, ஏட்டு கணேசன் ஆகியோர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அய்யலூர் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும் வகையில், 2 பேர் நின்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், அய்யலூர் களர்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 40), களத்துப்பட்டியை சேர்ந்த ஆண்டிவேல் (27) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரயைும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.